நான் அனைவருக்கும் சொல்லித் தரும் "மன குப்பை நீக்குதல்" தியான முறையை மனித இயல்பு தொடர்புடைய சில குணாதிசயங்களின் அடிப்படையில் உருவாக்கியுள்ளேன். இந்த முறையை எப்படி பயன்படுத்தலாம் என்பதை புரிந்துகொள்ள கீழ்கண்டவற்றை தெரிவது உதவும்:
1. கவலை என்பது பெரும்பாலும் நாம் கற்றுக் கொள்ளும் ஒரு பழக்கமாகவே இருக்கிறது. அதாவது சிலருக்கு 'கவலைப்படும் பழக்கம்' ஏற்பட்டுவிடுகிறது. WORRYING IS BY AND LARGE A HABIT.
2. கவலை பயம் என்ற மனித இயல்பில் ஒரு அடிப்படை உணர்வின் ஒரு வடிவம். பயம் என்ற உணர்வு நமக்கு அடிப்படையானது என்பதால் அத்துடன் தொடர்புடைய கவலை உணர்வை நாம் "இனிமேல் கவலைப்பட மாட்டேன்" என்பது போல் மிக எளிதாகவே நீக்கிவிடலாம் என்று கருதுவது தவறு. ஒருவர் ஏன் கவலைப்படுகிறார் என்பதை சரியாகத் தெரிந்து கொள்ளாமல், சும்மா "Be cheerful, be happy" என்று அறிவுரை கொடுத்து உதவு முடியாது.
... இன்னும் வரும்